தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான டி20 போட்டியில் விராட் கோலி இல்லை? – பிசிசிஐயின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை ரோகித் வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி 1 ஆண்டுகளாக டி20 போட்டியில் விளையாடாமல் உள்ளதால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டி20-யில் விராட் கோலி இந்திய அணிக்காக 105 போட்டிகளில் விளையாடி 4008 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதம் உள்பட 37 அரை சதங்கள் அடங்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports