தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools