தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த சான்றுகளை பெர சிறப்பு முகாம்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இதேபோல், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news