வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. மேலும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார். சாலைகளில் நடந்து சென்றும், பேருந்தில் பயணித்தும் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன் உடன் இருந்தார்.
பாராளுமன்ற குளிர்கால தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்று 80778 80779 தொடர்பு எண்ணையும் கனிமொழி அறிவித்து இருந்தார்.