தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இடைக்கால அறிக்கை – முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது

தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு இன்று தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கினார்.

மேலும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools