X

தூங்குவதற்கு முன் 37 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் – அமைச்சர் ஸ்மிருதி இரானி

 

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்குழந்தைகள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கினர்.

இதற்கிடையே, குழந்தைகளிடம் செல்போன் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு எதுவும் நடத்தியுள்ளதா? என மாநிலங்களவையில் வைகோ எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதா என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை. அதேசமயம் தூங்குவதற்கு முன் 37.15 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், படுக்கையில் 23.30 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார்.