X

துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவெற்ற இன்று மீண்டும் சட்டபை கூடுகிறது

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும். அப்போது அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெறும்.

துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு விவகாரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்ப அ.தி.மு.க.,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.