Tamilசெய்திகள்

துரோகம் மூலம் பொறுப்புக்கு வந்தவர் செந்தில் பாலாஜி – எடப்பாடி பழனிசாமி தாக்கு

துரோகத்தின் மொத்த வடிவம் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எடக்கு மடக்காக பேச, எடக்குன்னா என்ன? மடக்குன்னா என்ன? சினிமாவில் நடிகர் பார்த்திபன் கேட்பது போல் எடப்பாடி பழனிசாமியும் விடாமல் வெளுத்து வாங்கி விட்டார்.

அவர் தான் துரோகத்தின் மொத்த உருவம். இதுவரை எத்தனை கட்சிகளுக்கு மாறியுள்ளார். போகிற கட்சியினருக்கு எல்லாம் துரோகம் விளைவித்தவர் அவர். நான் 1974-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். இத்தனை ஆண்டு காலம் ஒரே கட்சியில் இருக்கிறேன் தி.மு.க.வில் பேட்டி கொடுக்க அமைச்சர்களே இல்லையா? அந்த கட்சிக்காக ஐம்பது, அறுபது ஆண்டுகள் உழைத்தவர்கள் எல்லாம் இருக்கும் போது துரோகம் மூலம் பொறுப்புக்கு வந்தவர் செந்தில் பாலாஜி” என்று கூறினார்.