துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று துரை தயாநிதியை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.