Tamilசினிமா

துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது

பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ‘மகான்’ படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

இந்நிலையில் துருவ்விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இப்படத்திற்கு பைசன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.