X

துரிக்கியில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்க திட்டம் – எலான் மஸ்க், எடோகன் சந்திப்பு

துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கி அதிபர் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மஸ்க் இடம் எர்டோகன் தெரிவித்தார்” என எர்டோகன் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்போது ஸ்டார்லிங் வழங்க பாதுகாப்பு தொடர்பாக உரிமத்தை பெற ஸ்பேஸ்எக்ஸ் விரும்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க் தனது மகனை கையில் வைத்திருந்தது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லாவின் முதலீட்டிற்கான மிகவும் முக்கியமான நாடுகளில் துருக்கியும் ஒன்று என மஸ்க் தெரிவித்ததாக, துருக்கி தொழில்துறை மற்றும் டெக்னாலாஜி மந்திரி மெஹ்மெட் ஃபதிக் கசிர் தெரிவித்துள்ளா். இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி டிரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறினார்.

Tags: tamil news