Tamilவிளையாட்டு

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி

துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மசாக் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.