துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. 2வது காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியும் மோதுவதாக இருந்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் ரிபாகினா விலகினார். இதையடுத்து பவுலினி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.