25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள பர்செல் நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணமாய் இருக்கிறது.
இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்து பெருமை சேர்த்த பி.வி.சிந்து டெல்லிய திரும்பியபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வீட்டுக்கு சென்ற பி.வி.சிந்து, அவரிடம் தங்கப் பதக்கத்தை காட்டி வாழ்த்து பெற்றார்.