X

துணைவேந்தர்கள் நியமத்தில் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் – விஜயகாந்த் வெலியுறுத்தல்

துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா நேற்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்ட திருத்த மசோதா
சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை உடனே மாற்றுவது என்பது இலகுவானது அல்ல. இந்தியா முழுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழ்நாட்டிலும் தொடர்ந்தால்
அனைவருக்கும் நல்லது. எனவே துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களை தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மையான துணைவேந்தர்களை நியமித்தால் மட்டுமே, பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் எதிர்காலமும்
சிறப்பாக அமையும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.