துணிவு, வாரிசு படங்களை இணையதளங்களில் வெளியிட கூடாது – நீதிமன்றம் உத்தரவு
விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.
வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், துணிவு, வாரிசு திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.