’துணிவு’ படத்தின் டப்பிங்கை தொடங்கினார் நடிகை மஞ்சு வாரியர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை மஞ்சுவாரியர் தனக்கான பகுதியினை டப்பிங் செய்து வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘துணிவு’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.