தீவிர முருக பக்தரான யோகி பாபு!

வத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக நடித்த திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயம் பற்றிய இந்த படத்தில் யோகி பாபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம். யோகி பாபு தொடக்க காலத்தில் நடித்த இந்த படம் இப்போது தான் ரிலீசாகி இருக்கிறது.

யோகி பாபு பற்றி திலீபன் கூறும்போது, “அவர் ஒரு தீவிர முருக பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார். எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிசியாக இருக்கிற ஒருத்தருக்கு தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்று கூறியுள்ளார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools