Tamilசினிமா

தி லெஜண்ட் படத்தின் சரவெடி டிரைலர் வெளியானது

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். மேலும், தனது வலைதளப்பக்கத்தில் ‘சரவெடி டிரைலர்’ எனக் குறிப்பிட்டு ‘தி லெஜண்ட்’ படத்தின் புதிய டிரைலரையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.