திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மகளிர் உரிமைத்தொகையை பெற பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரூ.1000 கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள். கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே உரிமைத்தொகை கொடுக்கிறார்கள். பா.ஜ.க.வும் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் ரூ.2000 ஆக்கி விடுவார்கள். தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம். தற்போது பொதுப்பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர். தி.மு.க. அரசு மக்களுக்காக எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.