Tamilசெய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 7க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளன. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் இல்லை. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.