கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தின் பாறசாலை நெய்யாற்றின் கரை, கோவளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, விளவங்கோடு, ஈச்சவிளை, கோழிவிளை, பனச்சமூடு, ஊரம்பு, காக்க விளை பகுதிகளில் இது போன்ற இரட்டை பதிவுகள் இடம் பெறுகிறது.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் சரி பார்க்கும்போது அவர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். அவர்கள் இதுபோல 2 தொகுதிகளில் பெயர் உள்ளவர்களை சரிபார்த்து அவர்களது முகவரி அடிப்படையில் ஒரு தொகுதியில் இருந்து பெயரை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.