X

திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய நடிகர் அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்நேகா ரெட்டி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் ‘ஸ்டார் கப்பிள்’ என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர ஜோடிகளாக இருவரும் உள்ளனர்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ரெட்டி இருவரும் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடி இருக்கிறார்கள். இதுதொடர்பான புகைப்படங்களை அல்லு அர்ஜுன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.