Tamilசினிமா

திருமணம் பற்றிய கேள்விக்கு காட்டமாக பதில் கூறிய நடிகை ஆலியா பட்

சமீபத்தில் வெளியான சஞ்சய் லீலா இயக்கிய கங்குபாய் படம் 40 கோடிகளை வசூல் செய்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆலியா பட்டின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கும் ரன்பீர் கபூருக்கும் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்து ஆலியா கூறியிருப்பதாவது, பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களைக் காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு எப்போது திருமணம் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள தேவையில்லை. நான் யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறேன் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. இதைவிட உங்களுக்கு முக்கியமான வேலைகள் இருக்கிறது. அதைப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.