திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் உமா சங்கர் சுதன்சு. ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. இவருடைய மகள் சினிக்தா. டாக்டரான இவர் கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். சினிக்தாவுக்கும், கிஷன்காஞ்ச் மாவட்ட கலெக்டரான மகேந்திர குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பாட்னாவில் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சினிக்தா சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றி தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சினிக்தாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.