X

திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? – எஸ்.ஜே.சூர்யா விளக்கம்

SJ Surya at Iraivi Press Meet

அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு 54 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை அவரும் மறுத்து வந்தார்.

இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதற்கான காரணத்தை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் நான் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டி உள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது.

ஒருவேளை நியூ படம் தோல்வி அடைந்து இருந்தால் என் நிலைமை மோசமாக மாறி இருக்கும். அந்த கஷ்டமும் என்னுடனேயே போய் இருக்கும். ஆனால் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருந்திருந்தால் அது அவர்களையும் பெரிய அளவில் பாதித்து இருக்கும்” என்றார்.