Tamilசெய்திகள்

திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் ஜெய்

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அதில் பேசும் போது, பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல, அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, ‘சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்’ என பதிலளித்தார் ஜெய்.

நடிகர் ஜெய் கைவசம் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஜெய், சுந்தர் சி-க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.