தெலுங்கானா மாநிலம் ஹனுமகோம்டா பகுதியில், காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறி வாலிபர் ஒருவர் பெண்ணை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்திய
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து வாரங்கல் காவல்துறை ஆணையர் தருண் ஜோஷி கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட பெண் நகரத்தைச் சேர்ந்தவர். வாலிபர் கிராமத்தில் வசிப்பவர். பெண்ணின் உறவினர் அக்கிராமத்தில் இருப்பதால், அங்கு சென்று வரும்போது இருவக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்துக்கொள்ள கேட்டபோது பெண் மறுத்ததாக தெரிகிறது. இதனால் பெண் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து, கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் தாக்குதல் நடத்திவிட்டு
வாலிபர் தப்பியுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.