Tamilவிளையாட்டு

திருமணத்திற்கு முன்பே தந்தை ஆனார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட்

வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இந்த மகிழ்சியான செய்தியை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், மோலி கிங் தனது மகளின் நெற்றியில் முத்தமிடுவதும், பிராட் மகளின் கன்னங்களில் முத்தமிடுவது போன்ற புகைப்படங்கள் இருந்தது. குழந்தையின் பெயரையும் இந்த ஜோடி அறிவித்துள்ளது. உலகிற்கு வரவேற்கிறோம் அன்னபெல்லா பிராட். நாங்கள் ஒருபோதும் இவ்வளவு காதலித்ததில்லை என்று பதிவின் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

மோலி கிங் மற்றும் பிராட் 2012 முதல் காதலித்து 2021 புத்தாண்டு தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூவர்ட் பிராட் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.