திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முனியாண்டிக்கு ஆதரவு திரட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். திறந்த வேனில் செல்லும் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்குட்பட்ட விரகனூர், ஐராவதநல்லூர், சின்ன அனுப்பானடி, சிந்தா மணி ரோடு, பனையூர் மெயின் ரோடு, சாம நத்தம் மெயின்ரோடு, விராதனூர் மெயின் ரோடு, வளையங்குளம், பெருங்குடி, அவனியாபுரம் பஸ் நிலையம், நாகம்மாள் கோவில் ஆகிய 12 இடங்களில் இரவு 9.15 மணி வரை ஆதரவு திரட்டி பேசுகிறார்.
முன்னதாக அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார்.
இன்று காலை அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.