திருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கு – உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி கே.கே ரமேஷ் என்பவர், அத்தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் அறிவித்தபடி 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.