Tamilசெய்திகள்

திருப்பதி கோவில் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் காலை வெளியிடப்பட்டது. 4.52 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

இலவச தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

1 முதல் 12-ந்தேதி 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும், 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என 1.60 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் கவுண்டர்களில் விநியோகிக்க தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.

திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை அலிபிரி சோதனைச்சாவடியில் தேவஸ்தான ஊழியர்கள் தடுத்து நிறுத்தி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு வருவதற்கு 48 நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பூசி மற்றும் சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் அலிபிரியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் முன்பாக கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 38,160 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,728 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது