திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்களின் விபரங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 1-ந்தேதி சர்வ ஏகாதசி, 15-வது பாலகாண்ட அகண்ட பாராயணம் தொடக்கம், 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம், 6-ந்தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம், பவுர்ணமி கருடசேவை, 16-ந்தேதி பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம், 23-ந்தேதி அட்சய திருதியை, 25-ந்தேதி பாஷ்யங்கார் சாத்துமுறை, ராமானுஜர் ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, அனந்தாழ்வார் உற்சவம் தொடக்கம், 29-ந்தேதியில் இருந்து மே மாதம் 1-ந்தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம். மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.