திருப்பதியில் கடந்த வாரம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குறைந்த அளவு பக்தர்கள் வந்தனர். நேற்று முன்தினம் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடந்தது. ஒரே நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் குறையாததால் வைகுந்தம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 78,639 பேர் தரிசனம் செய்தனர். 25,131 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.