திருநெல்வேலி பாராளுமன்ற எம்.பி. ஞான திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் திமுக கட்சியின் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச்செயலார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் புகார் வந்துள்ளது. விளக்கத்தை நேரிலோ, தபால் மூலமாகவே அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.