திருட்டு பொருட்களை அறிவதற்கான புதிய ஆப்பை வெளியிட்ட காவல் துறை – விஜய் சேதுபதி பாராட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மொபைல் செயலியை தொடங்கி வைத்த பின் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

‘சிசிடிவி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் ஆதரவோடு சி.சி.டி.வி. கேமரா அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விஜய் சேதுபதி, சாலமன் பாப்பையா, கோபிநாத், டாக்டர் சாந்தா, ஐசரி கணேஷ், கமலா செல்வராஜ், ஜோஸ்னா செல்லப்பா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

இந்த டிஜிகாப் செயலி மூலம் செல்போன், பைக் திருட்டை தவிர்க்க முடியும். பழைய மொபைல், பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க இந்த செயலி உதவும்’. இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் சேதுபதி பேசும் போது, ‘மக்களின் முக்கிய பிரச்சனையை காவல்துறையினர் கையில் எடுத்திருப்பது சிறப்பானது. காவல் நிலையங்களில் குப்பையாக இருந்த வாகனங்கள் அகற்றப்பட்டது பாராட்டத்தக்கது’ என்று குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools