திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
திரிஷா ’கடந்த ஆண்டு, தமிழில் ‘96’, மலையாளத்தில் ‘ஹே ஜூட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமானவை” என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற அவர் ஆசை, ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. அதற்குப் பிறகு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்த படத்தை, ‘எங்கேயும் எப்போதும்‘, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவிருக்கிறார். ‘ராங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஆக்ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவிர, சிம்ரனுடன் இணைந்து மற்றொரு அட்வென்சர் படத்தில் நடிக்கிறார், திரிஷா. சுமந்த் ராதாகிருஷணன் இயக்கவிருக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து எனப் பல்வேறு இடங்களில் நடக்கிறது.