திமுக-விடம் இருந்து ரூ,40 கோடி பணம் பெற்றோம்!- முத்தரசன் பேட்டி

திமுக-விடம் இருந்து தேர்தல் நிதி பெற்றது பணம் பெற்றது உண்மை தான் என்றும், தோழமை கட்சிகளுக்காக திமுக ரூ.40 கோடி வழங்கியதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “

திமுகவிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றது உண்மைதான் .திமுக தன்னுடைய தோழமைக் கட்சிகளுக்கு 40 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

இதில் எந்த ரகசியமும் கிடையாது. திமுகவின் கணக்கு வெளிப்படையானது. இது வங்கி மூலம் நடந்த பரிவர்த்தனை. திமுகவின் வெளிப்படைத் தன்மைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news