Tamilசெய்திகள்

திமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்

அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில், துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் தி.மு.க. ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். சட்டசபை உறுப்பினர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் வந்துள்ளனர். அமைச்சர் பொன்முடி இல்லத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவிக்க அவர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.