திமுக நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்

ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools