திமுக துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி நியமனம்!

அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools