தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் 27ம் தேதி காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
கூட்டத்தில் கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.