X

திமுக என்னிடம் விளக்கம் கேட்காமல், நடவடிக்கை எடுத்தது வருத்தமளிகிறது – ராதாரவி

ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘தி.மு.கவில் இருந்து நீக்கி விட்டதாக சொன்னார்கள். நீங்கள் என்ன நீக்குவது, நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். அரசியலில் இதெல்லாம் சகஜம்.

ஆனால், கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, ‘உன் மேல் இந்த தப்பு இருக்கு. உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது’ன்னு கேட்டு இருக்கலாம். அது மட்டும்தான் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

கே.ஆர். விஜயாம்மா சாமி வேடம் போடும்போது, அப்படியே அம்மன் மாதிரியே ஆகிவிடுவார். அந்த மாதிரி, நயன்தாராவும் தெலுங்குல சீதா வேடம் பண்றாங்க, இங்கே வேற வேற வேடம் எல்லாம் பண்றாங்க. என்ன வேடம் பண்ணினாலும் அவங்க சக்சஸ் பண்றாங்க. இதை நாம பாராட்டணும் அப்படி என்கிற அர்த்தத்தில் தான் பேசினேன்.

ஒருவர் நயன்தாராவை எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் அளவுக்கு உயர்த்தி பேசினார். நான் அதை அங்கேயே கண்டித்தேன். காரணம், அவர்கள் 2 பேரும் சினிமாவில் லெஜண்ட்ஸ். நயன்தாரா உழைப்பால் உயர்ந்த நடிகை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த்தோட ஒப்பிட்டு பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு சில கதாநாயகிகள் தவறான தொழில் செய்கிறார்கள் என்று அவர்கள் படத்துடன் செய்தி வந்தது. அப்போது அவர்களுக்காக வழக்கு போட்டு ஜெயித்து கொடுத்தேன். நடிகைகள் பற்றி ஒரு வார பத்திரிகையில் தொடர் வந்தபோது, நான், ரேவதி, வாசுகி அம்மா மூணு பேரும் போய் சண்டை போட்டு அந்த தொடரை நிறுத்தவில்லையா?

இதையெல்லாம் மறந்து விட்டார்கள். கடைசியாக ஒன்று சொல்கிறேன். நயன்தாராவை பற்றி நான் பேசியது அவர்களையும் அவர்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட செய்திருந்தால் அதற்கு நான் மனவருத்தப்படுகிறேன்.’

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags: south news