Tamilசெய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்லி கடன் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதில் அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை பொதுமக்கள் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைக்கின்றனர். இந்த பிரசாரத்துக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

3-வது கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் தொடங்கினார். விழுப்புரம் அருகே உள்ள காணைகுப்பம் என்ற இடத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகேட்டார். அப்போது ஏராளமான மக்கள் பங்கேற்று மனுக்களை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர்.

மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் பொதுமக்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் நகரம் மற்றும் காணை பகுதி விழாக்கோலம் பூண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தது.

முன்னதாக விழுப்புரம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் பொன்முடி தலைமையில் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் உறசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.