Tamilசெய்திகள்

திமுகவில் 10 லட்ச புதிய உறுப்பினர்கள் சேர்ந்தனர் – மு.க.ஸ்டாலின் தகவல்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

எல்லோரும் நம்முடன் முன்னெடுப்பு இன்று 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்த புதிய உடன்பிறப்புகளில் 53 சதவீதம் பேர் இளைஞர்கள்.

கொடிய, மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி, 2021-ல் தி.மு.க.வின் ஆட்சி உதித்திட தமிழகமே அலை அலையாய் ஆர்ப்பரிக்கிறது. இது ஒரு புதிய விடியலுக்கான துவக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.