திடீர் திருமணம் குறித்து விளக்கம் அளித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யா

சிம்புவுடன் ‘ஒஸ்தி’, தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படங்களின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் ரிச்சா கங்கோபாத்யா.

இந்நிலையில் இவர் தனது காதலர் ஜோ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து தற்போது ரிச்சா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

அதில், ”வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்தது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் கிரேட் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ். எங்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சில செய்திகளில் குறிப்பிட்டது போல ரகசிய திருமணம் இல்லை. நான் திரையுலகை விட்டு 6 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் என் மேல் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools