திடீரென இந்தியா மீது என்ன கோபம்? – ப.சிதம்பரம் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென இந்தியா மீது என்ன கோபம்?. எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது.

நாங்கள் Bharat என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான்.

இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news