திடீரென்று வென்னை வரும் அமைச்சர் அமித்ஷா – பா.ஜ.க முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை
மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க.
முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களும் நட்சத்திர ஓட்டலிலேயே தங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.