திகார் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவாலுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையில் தொடக்கத்திலிருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசிகளை அளிக்க சிறை அதிகாரிகள் மறுத்ததாக கூறி ஆம் ஆத்மியினர் திகார் சிறைக்கு முன் போராட்டம் நடத்தியது வரை இந்த மோதல் சென்றது.

இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான காலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இரண்டு நாட்களாக தொடர்ந்த விசாரணைக்குப் பிறகு திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவால் சிபிஐ அதிகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று கெஜ்ரிவால் மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools