தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் – சாய்னா, ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நோவல் மலோசியாவின் செல்வதுரை கிசோனாவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-15, 21-15 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கொரோனா பாசிட்டிவ் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட சாய்னா நேவால், அதன்பிறகு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வர விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் சவுரப் வர்மாவை 21-12, 21-11 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.